அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் கண் ஒளியியல் தினம்

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனையின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கண் ஒளியியல் தினம் கடைபிடிக்கப்பட்டது.;

Update: 2024-03-25 06:50 GMT

கண் ஒளியியல் தினம்

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் கண் ஒளியியல் தினம் கடைபிடிக்கப்பட்டது. கண் ஒளியியல் பிரிவு மாணவ, மாணவிகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருவிகளை உருவாக்கி அதனை பூங்காவாக நிறுவி இருந்தனர். இதனை துறையின் டீன் செந்தில்குமார் திறந்து வைத்தார். அந்த கருவிகளை பார்வையிட வந்த அனைவருக்கும் கண் பார்வை குறித்த விளக்கமும், மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.

Advertisement

மேலும் கண் ஒளியியில் தினத்தை முன்னிட்டு கண் சின்னத்துடன் கூடிய நீருற்றினை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் வடிவமைத்தனர். இதனை துறையின் டீன் திறந்து வைத்தார். தொடர்ந்து துறையின் இதர பிரிவு மாணவர்கள் கண் பூங்காவில் நிறுவிய கருவிகளை பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையின் ஒளியியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்சுடர் மற்றும் உதவி பேராசியர்கள் சவுந்தர்யா, மெய்பிரபு, ராம்பிரசாத், திவ்யா ஆகியோர் ெசய்திருந்தனர்.

Tags:    

Similar News