இடுவம்பாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு

திருப்பூர் மாநகராட்சி இடுவம்பாளையம் பகுதியில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-09 11:07 GMT

எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

திருப்பூர் மாநகராட்சி, இடுவம்பாளையம் பகுதியில், மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு. திருப்பூர் மாநகராட்சி 40 வது வார்டு இடுவம்பாளையம், தெற்கு விநாயகபுரத்தில், மாநகராட்சி சார்பாக ரூ 1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், தெற்கு விநாயகபுரத்தைச் சேர்ந்த ஒருபகுதியினர், இந்த இடம்  பாவடியாக பயன்படுத்தப்பட்ட இடம் எனவும்,  இங்குள்ள வீடுகளுக்கு இந்த பகுதியை தான் வழியாக நாங்கள் பயன்படுத்தி வருகின்றோம்.

  மேலும் விழா காலங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்காக இந்த இடத்தை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.  மேற்கூறிய  பகுதியில் மக்கள் அதிகளவில் வயதானவர்கள் முதல் சிறு குழந்தை வரை வசித்து வருகின்றனர். மேலும் இந்த இடம் மக்கள் நெருக்கடி மிகுந்த இடம் எனவும்,

ஆதலால் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டினால் சிறு குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படுவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த பகுதியில்  நாங்கள் ஒன்று கூடி பொது நிகழ்ச்சியில் நடத்துவதற்கும் இடையூறாக இருக்கும். எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்குமாறு மாமன்ற உறுப்பினரிடமும் தெரிவித்தோம்.

ஆனால், தங்களது கோரிக்கையை ஏற்காமல் ஆரம்ப கட்ட பணிகள் இன்று நடைபெறுவதற்கு ஒருபகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறிய போது, இடையூறு இல்லாத வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

Tags:    

Similar News