டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ,மேட்டூரில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு.

Update: 2024-02-01 11:28 GMT

 டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

மேட்டூர் அருகே ஜலகண்டாபுரம் பேருந்து நிலையம் முன்பு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்தக் கடைக்கு மது அருந்த வருபவர்கள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டு வந்ததால் கடையை அகற்றி வேறொரு இடத்திற்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. அகற்றப்பட்ட கடை கட்டி நாயக்கன்பட்டி எம்ஜிஆர் நகரில் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் கடை முடிவு செய்யப்பட்டது. அப்பகுதியில் செங்கோட்டையன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இரவோடு இரவாக மது பாட்டில்கள் கொண்டுவரப்பட்டு இன்று கடை திறக்க ஏற்பாடு செய்தனர். தகவல் அங்கு வந்த 100-கும் மேற்பட்ட கிராம மக்கள் புதிய  டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த ஜலகண்டாபுரம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இதனை அடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News