ஓபிஎஸும் நானும் வருங்காலத்தில் இணைந்தே செயல்படுவோம் - டி.டி.வி‌.தினகரன்

மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி‌.தினகரன் தனது 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து துணைவியார் அனுராதாவுடன் சிறப்பு அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம்

Update: 2024-03-01 06:08 GMT

டி.டி.வி‌.தினகரன் 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி அபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் கோவிலுக்கு இன்று காலை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தனது 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து அவரது மனைவி அனுராதாவுடன் வருகை வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோபூஜை, கஜ பூஜை செய்த பின்னர் கோவிலுக்குள்ளே சென்று கள்ள வார்ண விநாயகர், ஸ்ரீ காலசம்கார மூர்த்தி, ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் சன்னதியில் சென்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; 60 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்பாளின் அனுகிரகத்தை பெறுவதற்காக வந்துள்ளோம் என்றார். தொடர்ந்து கூட்டணி மற்றும் சின்னம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு; ஏற்கனவே எங்களுக்கு குக்கர் சின்னம் உள்ளது வதந்திகள், பொய் செய்திகள் மற்றும் யுகங்களை வைத்து கேட்காதீர்கள் கொஞ்சம் நாள் பொறுத்திருங்கள் உங்களது கேள்விகளுக்கு உறுதியான விடை கிடைக்கும். நானும் ஓபிஎஸ்யும் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்படுவோம் என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளோம். கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு உங்களிடம் தெரிவிக்கிறோம் என்றார்.
Tags:    

Similar News