உடல் உறுப்பு தானம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உடல் உறுப்பு தானம் செய்த இளைஞர் உடலுக்கு அரசு மரியாதை.
Update: 2024-01-20 05:13 GMT
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆம் தேதி இந்தியாவில் உடல் உறுப்பு தான நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதில் உடல் உறுப்புகள் தானம் செய்வதால் பல உயிர்களை காக்கும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது தமிழக அரசு உடல் உறுப்பு தானம் செய்யும் நபர்களின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஒருவர் உடல் உறுப்பு தானம் குறைந்தபட்சம் எட்டு நபர்களையும் அதிகபட்சம் 75 பேரையும் காப்பாற்ற முடியும் என மருத்துவ குறிப்புகள் கூறுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் தற்போது நோயிற்று மூளை சாவு அடையும் நிலையில், அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானங்களை செய்து தற்போது அதிகளவில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு உடல் நிலை காரணமாக சிகிச்சை பெற்று உயிர் இழக்கும் தங்களது கடைசி நேரத்தில் உடல் உறுப்புகளை தானம் அளித்து , பிறருக்கும் இதை தெரிவித்து அதிகளவில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த பிளஸ்1 மாணவர் ஹிதேந்திரன் 2008-ல் மூளைச்சாவு அடைந்த பிறகு, மருத்துவரான அவரது குடும்பத்தினர் அவரது இதயம் உள்பட பல உறுப்புகளும் பலருக்கு பொருத்தப்பட்டது விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த கிளார், பஜனை கோயில் தெரு பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் கோபி கடந்த 15 ஆம் தேதி தனது நண்பருடன் வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளார். உடனடியாக கோபி என்பவரை சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் அவரது நண்பரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோபியின் உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து அவரது பெற்றோர்கள் இறுதி நேரத்தில் கோபி பெற்றோர்கள், இதயம் , இதய வால்வுகள் , கல்லீரல்கள் , இரு சிறுநீரகங்கள், கண் உட்பட ஆறு உடல் உறுப்புகளை தானம் செய்து மீண்டும் மனித நேயத்தை வெளிப்படுத்தி பலரின் வாழ்வினை ஒளியேற்றிட செய்துள்ளார். இவரது செயலை பாராட்டி மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ,சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலர் அவரது உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தி அரசு மரியாதை உடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. யாருக்கும் கிடைக்காத இந்த அரிய மானிட பிறப்பில் தனக்குப் பிறகும், பிறர் வாழ உதவி செய்துவிட்டு மன நிறைவுடன் செல்லும் இது போன்ற உடல் உறுப்பு தான நபர்களை போற்றி இதனை உலகறிய செய்து அனைவரும் உடல் உறுப்பு தானத்தை பின்பற்றி பிறர் வாழ வழி செய்வோம்.