21,988 பேர் தேர்வு எழுதியதில் 736 மாணவ மாணவிகள் ஆப்சென்ட்!

புதுக்கோட்டையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 21,988 பேரில் 736 மாணவ மாணவிகள் ஆப்சென்ட்!

Update: 2024-03-27 09:02 GMT

புதுக்கோட்டையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 21,988 பேரில் 736 மாணவ மாணவிகள் ஆப்சென்ட்!


புதுக்கோட்டை: மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வினை, புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 21,988 பேர் எழுதினர். மாநில அளவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 136 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 22,728 பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். இவர்களில்,செவ்வாய்க்கிழமை முதல் தேர்வை 10,765 மாணவர்களும், 11,077 மாணவிகளும், 147 தனித்தேர்வர்களும் என மொத்தம் 21,988 பேர் எழுதினர். 736 பேர் தேர்வெழுத வரவில்லை. இத்தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 26 வினாத்தாள், விடைத்தாள் எடுத்துச் செல்லும் வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இலுப்பூரில் ஆட்சியர் ஆய்வு: இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வருவாய்க் கோட்டாட்சியர் தெய்வநாயகி, மக்கள் தொடர்பு அலுவலர் க. பிரேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News