புறக்காவல் நிலையம் சூறை - குற்றவாளிகளை ஒப்படைக்க மறுத்து முற்றுகை

சாத்தூர் அருகே  மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதற்கு வழக்கு பதிவு செய்ததால் புற காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய  கும்பலை கைது செய்யவிடாமல் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-01-17 02:53 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெற்றி முருகன் தலைமையிலான போலீசார் வெம்பக்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தாயில்பட்டி அருகே உள்ள கீழ கோதை நாச்சியார் புரத்தை சேர்ந்த நாகேஸ்வரன் (25) மற்றும் காளீஸ்வரன் (25) ஆகிய இருவரும் மீனாட்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த போது சார்பு ஆய்வாளர் வெற்றி முருகன் அவர்களை சோதனை செய்த போது இருவரும் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியது தெரிய வந்ததை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இரண்டு பேரின் இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நாகேஸ்வரன் மற்றும் காளீஸ்வரன் ஆகிய இருவரும் தங்களுடைய கிராமத்திற்கு சென்று நாட்டாமை கொடியரசுவிடம் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த நாட்டாமை கொடியரசு நாகேஸ்வரன் மற்றும் காளீஸ்வரன் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் தாயில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு சென்று அங்கு இருந்த சேர் மற்றும் டேபிளை அடித்து நொறுக்கி உள்ளனர்.

மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக் கோட்டை போலீசார் புறக்காவல் நிலையத்தில் இருந்த சேர் மற்றும் டேபிளை அடித்து நொறுக்கி விட்டு கீழ கோதை நாச்சியார்புரத்தில் இருந்த நாட்டாமை கொடியரசு உள்ளிட்ட நபர்களை கைது செய்ய போலீசார் அங்கு சென்று போது அவர்களை கைது செய்ய விடாமல் போலீசாரை முற்றுகையிட்டு கிராம பொது மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சாத்தூர் DSP வினோ ஜி மற்றும் வெம்பக்கோட்டை காவல் ஆய்வாாளர் சங்கர் ஆகிய இருவரும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் தாயில்பட்டியில் புற காவல் நிலையத்தை சேதப்படுத்திய நபர்களை சரணடைய செய்வதாக கிராம பொதுமக்கள் ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த பகுதியில் இருந்து போலீசாரும் கலைந்து சென்றனர். மேலும் மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதற்கு வழக்கு பதிவு செய்ததால் புற காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News