வாணியம்பாடிஅருகே எருதுவிடும் விழா 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைப்பெற்ற விடும் விழா 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாபெரும் எருது விடும் விழா நடைப்பெற்று வருகிறது. இந்த எருது விடும் விழாவை வாணியம்பாடி வட்டவழங்கல் அலுவலர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் பழனி மற்றும் வாணியம்பாடி வட்டாச்சியர் சிவபிரகாசம் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்ட, பின்னர் எருது விடும் விழாவை வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த எருது விடும் விழாவில் வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் குப்பம், போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன, கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்கு பின்னர் எருதுகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது, குறிப்பிட்ட இலக்கை குறைந்த மணித்துளிகளில் கடந்த காளையிற்கு முதற்பரிசாக 1 லட்சத்து 1 ரூபாயும்,
இரண்டாம் பரிசாக 80 ஆயிரத்து 1 ரூபாயும், மூன்றாவது பரிசாக 60 ஆயிரத்து 1 ரூபாய் என மொத்தம் 46 பரிசுகள் வழங்கப்பட்டது.. மேலும் இந்த எருது விடும் விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்..