நிரம்பி வரும் ஏரி, குளங்கள்: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஆரணி கமண்டல நாக நதிக் கரையில் எச்சரிக்கை பலகை வைத்த டிஎஸ்பி ரவிச்சந்திரன்.
நிரம்பி வரும் ஏரி, குளங்கள்: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் நிரம்பி வரும் ஏரி, குளங்கள் மற்றும் ஆற்றுப் பகுதியில் காவல் துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த எச்சரிக்கை பலகைகள் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டன.
தற்போது பலத்த மழை பெய்து வருவதால் ஆரணி, இரும்பேடு, களம்பூர், முள்ளிப்பட்டு, கண்ணமங்கலம், அம்மாபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஏரிகளில் போலீ ஸார் வைத்துள்ள எச்சரிக்கை பலகையில், இந்தப் பகுதியில் பொது மக்கள், சிறுவர்கள் வருவதோ, தண்ணீரில் இறங்குவதோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ஆரணி கமண்டல நாகநதிக் கரையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. கிராமிய காவல் ஆய்வாளர் ராஜாங்கம், நகர காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், உதவி ஆய்வாளர்கள் ஷாபுதீன், சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.