முன்விரோதத்தால் பெயிண்டருக்கு கத்திக்குத்து !
மயிலாடுதுறை அருகே ஒரே தெருவை செய்தவர்களுக்குள் முன்விரோதத்தால் இளைஞருக்கு கத்திக்குத்து. போலீசார் விசாரணை.
By : King 24x7 Angel
Update: 2024-03-09 05:26 GMT
மயிலாடுதுறை அருகே திருவிளையாட்டத்தை சேர்ந்தவர் ஏசுராஜ் (32). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அந்தோணிதாஸ் . இரு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. திடீரென்று இரவில் அந்தோணிதாஸ் குடும்பத்தினர் ஏசுராஜின் வீட்டில் நுழைந்து கத்தி, கம்பி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். ஏசுராஜ் மார்பில் கத்திக்குத்துப்பட்டு மயங்கிவிழுந்தார், உடனடியாக ஏசுராஜை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஏசுராஜ் மனைவி ஆஷாமேரி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். உடனடியாக வழக்குப் பதிவுசெய்து குற்றவாளியை கைது செய்யவேண்டும் என்று ஏசுராஜ் குடும்பத்தினர் மாவட்டகாவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோல் விடத்துள்ளனர்.