நேதாஜி ஜெயந்தியை முன்னிட்டு ஓவியப்போட்டி

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தியை முன்னிட்டு சூலூர் விமானப்படைத் தளத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் ஓவிய போட்டி நடந்தது.

Update: 2024-01-24 09:46 GMT

ஓவிய போட்டி 

கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தியை (Parakram Diwas) முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி கோவையில்  நடைபெற்றது.சூலூர் விமானப்படைத் தளத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில், மத்திய அரசின் 'Pariksha Pe charcha' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவும் இந்த ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.இதில் கேந்திர வித்யாலயா பள்ளி உட்பட பல்வேறு தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டு தேசப்பற்று மிக்க ஓவியங்களை வரைந்தனர். தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படுகின்றது. பள்ளி மாணவர்கள் மத்தியில் தேசப்பற்றினை விதைக்கும் வகையிலும், பரிட்ச்சை குறித்த பயத்தைப் போக்கவும் இந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News