சேலத்தில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை

சூரமங்கலம் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்

Update: 2024-06-17 16:47 GMT

சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சின்ன அம்மாபாளையம் பகுதியில் இருக்கும் ஈத்கா மைதானத்தில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.

இதில் சூரமங்கலம் மற்றும் அதையொட்டி உள்ள பகுதியில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரே இடத்தில் பங்கேற்று சிறப்பு தொழுகை செய்தனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இதுபோல சேலம் அம்மாப்பேட்டை மற்றும் உடையாப்பட்டி, சூரமங்கலம், கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது . இதிலும் திரளான முஸ்லீம்கள் பங்கேற்றனர் . இது தவிர சேலத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடந்தது.

Tags:    

Similar News