முத்தாலம்மன் கோவில் உற்சவ விழா - பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்தாலம்மனுக்கு பொங்கல் வைத்து ,கிடாய் வெட்டி, பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

Update: 2024-06-21 08:15 GMT
 மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின்முறைக்கு தனித்து பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் முதல் நாளில் மறவபட்டி சென்று அம்மனை அழைத்து வருதல், பூசாரி வீட்டிலிருந்து நகைப்பெட்டி தூக்கி சென்று அம்மனுக்கு கண்திறந்து நகை அலங்காரத்துடன் அம்மன் ஆலயத்திற்கு அழைத்து வருதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரண்டாம் நாளில் முத்தாலம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டி பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மூன்றாம் நாளில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த திருவிழா ஏற்பாடுகளை தெற்கூர் நாயுடு உறவின்முறை சங்கம், இளைஞர் சங்கம் செய்திருந்தனர்...
Tags:    

Similar News