கோவில் தேவராயன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் காவடி
தஞ்சாவூர் மாவட்டம், பண்டாரவடை கோவில் தேவராயன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் காவடி திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Update: 2024-04-21 14:13 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை ஊராட்சி கோவில் தேவராயன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் காவடி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது அது சமயம் திரளான பக்தர்கள் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பால்குடம் காவடி எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக மகா மாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் இரவு அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிப்பட்டனர்.