பாமக மற்றும் வன்னியர் சங்கம் கொடியேற்று விழா !

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி, ஊத்தங்கரை பேருந்து நிலையம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது,.

Update: 2024-03-05 11:31 GMT

பாமக மற்றும் வன்னியர் சங்கம்

ஊத்தங்கரையில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் கொடியேற்று விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி, ஊத்தங்கரை பேருந்து நிலையம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஜிம் ராஜ்குமார் தலைமை தாங்கினார், சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் பிஜி அண்ணாமலை, முன்னாள் மாவட்ட செயலாளர் செ, ஆறுமுகம், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பில்லா மாதேஷ், ஆகியோர் பாமக மற்றும் வன்னியர் சங்ககொடிகளை ஏற்றி பேருந்து நிலையத்தில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலு, மாவட்ட துணை செயலாளர் புறா ரவி, மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் குமரேசன், மாவட்டத் தேர்தல் பணி குழு துணை செயலாளர் பெரியசாமி, இளைஞரணி மாவட்ட மாவட்ட செயலாளர் ஹரிதாஸ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்டத் துணைத் தலைவர் சரவணன் கலை இலக்கியதலைவர் சரவணன், கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் சின்ன கண்ணு முத்து, நாடார் இளைஞர் அணி துணை செயலாளர் மாதேஷ், வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் அரவிந்தன், பசுமை தாயக ஒன்றிய செயலாளர் செல்வம், பேரூராட்சி இளைஞரணி செயலாளர் ராமகிருஷ்ணன், பேரூராட்சி அமைப்பு செயலாளர் கபில், ராமதாஸ், புகழ், மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர், நிறைவாக நன்றி உரை மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ் கூறினார்.அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் நரேந்திர மோடியின் சித்து விளையாட்டுக்கு ஏமாற மாட்டார்கள் - கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி பேட்டி தமிழகத்தில் தலை விரித்தாடும் போதை பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார் எம் எல் ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே பி முனுசாமி எம் எல் ஏ கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி திமுகவில் இருக்கும் ஒருவர் 2000 கோடி ரூபாய் அளவிற்கு போதை பொருள் ஏற்றுமதி செய்யும் நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக நடவடிக்கை எடுத்து ஜாஃபர் சாதிக் என்பவரை அடையாளம் கண்டுள்ளார்கள். தலைமறைவாக உள்ள அவர் 45 முறை தேங்காய் துருவல், மீன் பொருட்களில் வைத்து போதை பொருள் கை மாறி உள்ளது. அதைக் கண்டு கொள்ளாமல் இருந்த திமுக ஆட்சியையும் முதல்வரையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம். கடந்த ஆட்சியில் போதை பொருள் புழக்கத்தை கண்டுபிடித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அளவில் செல்லாமல் பார்த்துக் கொண்டோம். தற்போதைய ஆட்சியில் டீக்கடை பெட்டிக்கடைகளில் எல்லாம் கஞ்சா பொருள் கிடைக்கிறது கடந்த ஆட்சியில் இந்த நிலைமை கிடையாது. தற்பொழுது உலக அளவில் போதைப்பொருள் கைமாறும் கேந்திரமாக தமிழ்நாடு மாறி உள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த ஆட்சி செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம். பாரதப் பிரதமர் கட்சி மேடைக்கு வர வேண்டும் என்றால் அவர் தனியாக வரவேண்டும் ஆனால் பாரத பிரதமர் தனியாக வராமல் ஏதாவது ஒரு அரசு நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு அரசின் செலவில் வந்து அந்த நிகழ்ச்சியை பார்வையிட்டு பின் தன்னுடைய கட்சியின் அரசியல் மேடைக்கு செல்கிறார். இப்படி ஒரு சுயநலமிக்க தலைவராக தான் பாரத பிரதமர் இருக்கிறார். நாங்கள் எங்களுடைய கட்சியை உருவாக்கிய தலைவர்களை பற்றி அரசியல் மேடைகளில் பேசுவோம். ஆனால் பாரத பிரதமர் தன்னை வளர்த்த ஆளாக்கிய பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து பேசுவதில்லை, கட்சியை உருவாக்கி வயது முதிர்வால் ஒதுங்கி இருக்கக்கூடிய அத்வானி குறித்து பேசுவதில்லை தன் கட்சியினுடைய முன்னோர்கள் குறித்து பேசாமல் மாற்று கட்சியினுடைய தலைவர்கள் குறித்து பேசி மக்களை ஏமாற்ற வேண்டுமென அவர் முயற்சி செய்கிறார். எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமியின் கொள்கைகள் மட்டும் ஆட்சியின் சாதனைகளை ஏற்றுக்கொண்ட தொண்டர்களும் பொதுமக்களும் யாரும் நரேந்திர மோடி ஏமாற்றுகின்ற இந்த சித்து விளையாட்டிற்கு ஏமாற மாட்டார்கள். இதை நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மோடி அவர்களும் அண்ணாமலை அவர்களும் புரிந்து கொள்வார்கள் போதைப் பொருட்களின் ஊற்றுக்கண் குஜராத்தில் உள்ளது. 25 ஆண்டுகளாக குஜராத்தை ஆட்சி செய்பவர்கள் பாஜகவினர். குஜராத்துக்கு தான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஈரான் நாட்டில் இருந்து ஹெராயின் மெத்தமின் வருகிறது. குஜராத்தில் தான் ஹெராயன்களை பதப்படுத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் காளான் போல் உள்ளது. தற்பொழுது கான்ட்லா போர்ட், அதானி போர்ட் போன்ற இடத்தில் மூன்று மெட்ரிக் டன் அளவில் 21,000 கோடி மதிப்பில் ஹேராயின் மெத்தமின் பிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்திலும் ஹிமாச்சல் பிரதேசத்திலும் தான் போதைப் பொருள் உட்கொண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என சர்வே கூறுகிறது. அண்ணாமலை முதலில் அவர்கள் முதுகில் இருக்கக்கூடிய அழுக்கை எடுக்கச் சொல்லுங்கள். திராவிட கட்சிகள் இந்த நாட்டை சீரழித்தது என கூறுகிறார் 25 ஆண்டு காலம் குஜராத்தில் முதலமைச்சராக இருந்தார்கள் அங்கு உயர்கல்வி படிப்போரின் விகிதாச்சாரம் 34 சதவீதம் ஆனால் தமிழகம் 52 சதவீதத்தில் உள்ளது. 95லிருந்து குஜராத்தில் முதலமைச்சராக இருந்த மோடி அங்கு இரண்டு தனியார் கல்லூரிகள் தான் கொண்டுவந்துள்ளார் ஆனால் 10 ஆண்டுகளில் அதிமுக 16 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளது. திமுக அரசின் முதல்வர் இளைஞர்களையும் மாணவர்களையும் காப்பாற்ற வேண்டும் எதிர்கால இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையாக தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். இதில் திமுக அரசு பாராமுகமாக இருந்தால் இந்த சமூகத்தின் மிகப்பெரிய பலிக்கு நிரந்தரமாக ஆளாகி விடுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவின் பொதுச்செயலாளரும் அவர் உத்தரவின் படி கட்சியினரும் கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் இது முடிவுக்கு வந்து கட்சியினுடைய பொதுச்செயலாளர் தான் கூட்டணி கட்சி தலைவர்களை தலைமை கழகத்தில் அருகில் வைத்துக் கொண்டு கூட்டணி குறித்து அறிவிப்பார். அதுதான் அதிமுக கட்சியினுடைய கட்டுப்பாடு. அதேபோல் மாற்று கட்சியினுடைய கூட்டணியில் இருப்பவர்களை வளைவிரிப்பதற்கு அதிமுக பலவீனமான கட்சி இல்லை என தெரிவித்தார்.
Tags:    

Similar News