உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள்

கும்பகோணத்தில் உலக நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Update: 2024-03-16 17:37 GMT

துண்டு பிரசுரங்கள் வழங்குதல் 

கும்பகோணத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது. நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம், பொருட்களின் அளவு, தரம், தூய்மை, ஆற்றல், விலை மற்றும் தரம் பற்றிய போதுமான தகவல்களை நினைவூட்டுவதாக இந்த நாள் திகழ்கிறது. இந்நிலையில் ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உரிமைகள் குறித்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு காந்தி பூங்கா முன்பு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மையம் தலைவர் ராம்மனோகர், தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதில் ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் பாபு ராவ், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு மையம் செயலாளர் பாலமுருகன், சட்ட ஆலோசகர் கண்ணன், நிர்வாக செயலாளர் பத்மநாபன், இணை செயலாளர் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் அருள்பிரகாஷம், ஜெயக்குமார், சிக்கந்தர், சுலோச்சனா மோகன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Tags:    

Similar News