பாணாவரம் அரசு BSNL அலுவலகத்தில் திருட்டு இணைய சேவை பாதிப்பு.
பாணாவரம் அரசு BSNL அலுவலகத்தில் திருட்டு இணைய சேவை பாதிப்பு.
By : King 24x7 Website
Update: 2023-12-22 17:39 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் காந்தி சிலை அருகே உள்ள வண்ணாரப்பேட்டை தெருவில் பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலவலகத்தில் இருந்து காவல் நிலையம், மின்சார அலுவலகம், மருத்துவமனை , இசேவை மையங்கள், வங்கிகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களுக்கு இன்டர்நெட் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு சேவைகள் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. மேலும் லேன்லைன் பயன்படுத்தும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், பாணாவரம் பகுதியில் இணைய சேவைகள் முற்றிலும் முடங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எச்சரிக்கை குறுஞ்செய்தியும் அரக்கோணம் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கும் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து லேன்லைன்சேவை மற்றும் இன்டா்நெட் சேவை கிடைக்காததால் பொதுமக்களும் கடும் சிரமப்பட்டு வந்துள்ளனா். இது தொடர்பாக பிஎஸ்என்எல் மாவட்ட உதவி பொதுமேலாளர் கிருஷ்ணா தலைமையில் இளநிலை தொலைபேசி அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பாணாவரம் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய வந்துள்ளனா். அப்போது ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பின் பக்க கதவு தாழ்பாள் உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பேட்டரி மற்றும் ஏசி காப்பர் பைப்புகளை திருடி சென்றது கதவை உடைத்து வெளியே சென்றது தெரிய வந்தது. இதேபோல்,கடந்த 13 மற்றும் 19 தேதிகளில் இவ்வலுவலகத்தில் மர்ம நபர்கள் விலை உயர்ந்த கேபிள் காப்பர்களை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. இவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 70 ஆயிரம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து பாணாவரம் காவல் நிலையத்தில் ஜேடிஒ சீனிவாசன் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒரே வாரத்தில் நகரின் மைய பகுதியில் 3 முறை மர்ம நபர்கள் மின்னணு பொருட்களை திருடி கைவரிசையில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.