திருமயத்தில் விளக்குகளை உடனே சரி செய்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர்
திருமயத்தில் விளக்குகள் உடனே சரி செய்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமயம் ஊராட்சியில் தெருவிளக்குகள் எரியவில்லை இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவில் உடனடியாக களத்தில் இறங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் இது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து அங்குள்ள பணியாளர்கள் உடனடியாக அந்த விளக்குகளை எரிய செய்தனர். பொதுமக்கள் அளித்த புகார் பேரில் 2 மணி நேரத்திலேயே அதை சரி செய்து கொடுத்த திருமய ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு பொதுமக்கள் நன்றியும் வாழ்த்து தெரிவித்தனர்.
குறிப்பாக சொல்ல வேண்டும் ஆனால் திருமயம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் சிக்கந்தர் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற பிறகு அடிப்படை வசதிகளை முன்னின்ற செய்து உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி பொது மக்களின் பாராட்டுதலை பெற்றுள்ளார் திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர்.