வெள்ள பாதிப்பு கிராமத்தை புறக்கணிக்கும் பஞ்சாத்து

வெள்ளத்தில் மிதக்கும் மாப்பிள்ளையூரணியை புறக்கணிக்கும் பஞ்சாயத்து - நடவடிக்கை எடுப்பாா்களா ?;

Update: 2023-12-31 04:37 GMT

வெள்ளத்தில் மிதக்கும் மாப்பிள்ளையூரணியை புறக்கணிக்கும் பஞ்சாயத்து - நடவடிக்கை எடுப்பாா்களா ? 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதில், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து, ஜெ. ஜெ. நகர் பகுதியில் 15 நாட்கள் கடந்தும் வெள்ள நீர் வெளியேறாமல் உள்ளது. அதிகாரிகள் வெள்ளநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிடன்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "ஜெ.ஜெ.நகரில் வெள்ளம் ஏற்பட்டு அதனால் அதிகம் பாதிக்கப்பட்டு வீடுகளை,உடமைகளை ,உறவுகளை இழந்து 15 நாட்களுக்கு மேலாக அகதிகளைப் போல் பள்ளிக்கூடத்தில் தங்கி வாழும் நிலை உள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இப்பகுதியை பார்வையிட வில்லை. மாநகராட்சிப் பகுதிகளில் 3 நாட்களில் வெள்ள நீரை சரி செய்ய முடிகிறது. ஆனால், கிராம பஞ்சாயத்துகளின் பக்கம் அதிகாரிகளின் திரும்புவதில்லை.? பெயருக்கு கண் துடைப்பு நாடகம் போல் அதிகாரிகளை வசதியான மகிழுந்துகளில் உலா வர செய்து விட்டால் எங்களுடன் நீரில் இறங்கி வேலை செய்வது யார்? எங்களுக்கு உங்களின் நிவாரண பொருட்கள் தேவை இல்லை... உணவுப் பொட்டலங்களும் தேவை இல்லை. 15 நாட்களுக்கு மேலாக எங்கள் நீரில் மிதப்பது எங்கள் வீடுகளும் உடமைகளும் மட்டுமல்ல... எமது மக்களின் வாழ்வாதாரம். உடனடியாக நீரை வெளியேற்ற மாவட்ட ஆட்சியர், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News