பொன்னமராவதி: ஊராட்சித் தலைவர் வீட்டில் திருட்டு

பொன்னமராவதி அருகே காரையூரில் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-05-08 05:48 GMT

கோப்பு படம்

பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் ஊராட்சி மன்றத் தலைவர் மு. முகமது இக்பால்(47). இவர் கட்டட ஒப்பந்த வேலை பார்த்து வந்தார். இவரிடம் காரையூரைச் சேரந்த ஆறுமுகம் மகன் வேலு(34) என்பவர் வேலைபார்த்து வந்தார்.

இவர், வேலை காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டுக்கு அடிக்கடிசென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டில் லாக்கரில் இருந்த ரூ. 5லட்சத்தை காணவில்லையாம்.இதேபோல கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே லாக்கரில் இருந்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தையும் காணவில்லையாம்.இதுகுறித்து காரையூர் காவல்நிலையத்தில் முகமதுஇக்பால் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தொழிலாளி வேலுவிடம் விசாரணை செய்ததில் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டார்.இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News