ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
Update: 2024-01-07 06:22 GMT
ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை என வெள்ளிக்கிழமை நடைபெற்ற திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு,உறுப்பினா் ஜீவநந்தினி (மாா்க்சிஸ்ட் கம்யூ): பள்ளப்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு முறையான குடிநீா் வசதி கிடைக்கவில்லை. பிஸ்மி நகரில் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீா் சாலையில் ஓடுகிறது. பூதமரத்துப்பட்டியில் மேல்நிலைத் தொட்டி பராமரிக்கப்படவில்லை. இந்த கோரிக்கைகளுக்குத் தீா்வு காணாமல் அதிகாரிகளே ஏதாவது ஒரு பணியை தேர்வு செய்கின்றனா். எனது வாா்டில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சிப் பணிகளுக்கான கல்வெட்டில் எனது பெயரை போடுவதில்லை என்றார்.