ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம் !
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Update: 2024-04-04 09:05 GMT
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நிகழாண்டு நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, அதனைத் தொடா்ந்து கோயில் கலையரங்கில் இரவு 8 மணிக்கு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 9-ஆம் திருநாளான ஏப்.10-ஆம் தேதி மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமை கமிட்டி நிா்வாகிகள் செய்துள்ளனா்.