ஸ்ரீ ராகவேந்திரா கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி மற்றும் சத்யநாராயண பூஜை

கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் பங்குனி மாத பெளர்ணமி மற்றும் சத்யநாரயண பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-25 01:40 GMT

சிறப்பு பூஜை

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சித்தர் யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 119- வது பெளர்ணமி தரிசனம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜையும் செய்து மகாதீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார்.

இந்நிகழ்வில் மதுராந்தகம் சார்பு நீதிபதி சரிதா,குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி பாஸ்கரன்,சென்னை அண்ணாநகரை சேர்ந்த கீதா பாலச்சந்திரன், மதுராந்தகம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், மேனாள் கல்லூரி கல்வி இணை இயக்குனர் சிவ. பொன்னம்பலவாணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கருங்குழி மட்டுமின்றி செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, பெங்களுரு, கடலூர், மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சித்தரிடம் அருள் ஆசிபெற்றனர். இதில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News