சிவகாசியில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்...

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

Update: 2024-03-31 16:48 GMT

கொடியேற்றம் நிகழ்ச்சி 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவின் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமுதாய உறவின் முறை சார்பாக ஸ்ரீமாரியம்மதுக்கு அபிஷேகம் செய்து வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பங்குனி பொங்கல் திருவிழா, வரும் ஏப்ரல் 7ம் தேதியும்,8ம் தேதி கயறுகுத்து மற்றும் அக்னிச்சட்டி திருவிழா,9ம் தேதி பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்தலும்,11 ஆம் தேதி காலை தபங்குனி பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு, ஸ்ரீமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் திருவிழா உபயதார்கள் செய்கின்றனர்.
Tags:    

Similar News