கரந்தாநேரி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
திருநெல்வேலி மாவட்டம், கரந்தாநேரி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-03-24 06:53 GMT
பங்குனி உத்திரம்
திருநெல்வேலி மாவட்டம் கரந்தாநேரி அருள்தரும் ஸ்ரீ பூரண ஸ்ரீ புஷ்பகலா சமதே அருள்மிகு ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மார்ச் 24) காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.