பழனியில் இருபது இடங்களில் பஞ்சாமிர்தம் விற்பனை

பழனியில் இருபது இடங்களில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-12-04 09:47 GMT

பஞ்சாமிர்தம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பழனி கோவில் நிர்வாகம் சார்பில் இருபது இடங்களில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற கோயிலாக விளங்குவது பழனி கோயிலாகும். வருமானத்தில் நம்பர் ஒன் கோயிலாகவும் விளங்குகிறது.

இங்கு ஆண்டு தோறும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவற்று பத்து லட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் கூடுவார்கள். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. பழனி கோயிலின் புகழ்பெற்ற பிரசாதமான பஞ்சாமிர்தத்தை பல இடங்களில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் பஞ்சாமிர்தத்துக்கு அலைய வேண்டாம் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News