பாபநாசம்: படைவெட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
பாபநாசம் படைவெட்டி மாரியம்மன் ஆலய கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது;
By : King 24X7 News (B)
Update: 2024-05-12 17:56 GMT
படைவெட்டி அம்மன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் காட்டுநாயக்கன் பழங்குடியினர் தெருவில் அமைந்திருக்கும் படைவெட்டி மாரியம்மன் ஆலய கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அது சமயம் பாபநாசம் 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பால்குடம் அலகு காவடி எடுத்து திருநங்கைகள் நடனத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலில் வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.மதியம் கஞ்சிவார்த்தல் நடைபெற்றது மாலையில் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிப்பட்டனர்.