பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

Update: 2024-04-02 02:45 GMT

இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவைத் தேர்தலுக்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிடங்கில் இருந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் கனரக வாகனம் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் பாபநாசம் வட்ட வழங்க அலுவலர் அருணகிரி தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன் முதல் நிலை வருவாய் ஆய்வாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குரிய 361 வாக்குச்சாவடி வாக்குப்பதிவு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் இறக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

Tags:    

Similar News