பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று சாதனை

சேலம் திரும்பிய வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2024-02-18 10:24 GMT

வீரருக்கு பாராட்டு 

துபாய் நாட்டில் உலக அளவில் பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த வாரம் நடந்தது. இதில், 109 நாடுகளை சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் சேலம் அழகாபுரம் பெரியபுதூரை சேர்ந்த கே.சஞ்சய்கண்ணா கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதையடுத்து அவர் நேற்று துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அதன்பிறகு அவர் ரெயில் மூலம் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த சஞ்சய் கண்ணாவுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், தடகள பயிற்சியாளர் உலகநாதன், சேலம் மாவட்ட பாரா விளையாட்டு சங்க செயலாளர் ராஜேந்திரன் மற்றும் வெற்றி, சம்பத், முருகேசன், முனிரத்தினம், ராமச்சந்திரன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், பெரியபுதூர் ஊர் பொதுமக்களும் சஞ்சய்கண்ணாவுக்கு சால்வை அணிவித்தும்,

பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பெரியபுதூர் வரை ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News