மேம்பாலத்தின் கீழ் வாகன நிறுத்தம்: ஒரகடத்தில் வாகன ஓட்டிகள் அவதி

ஒரகடம் மேம்பாலத்தின் கீழ், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.;

Update: 2024-06-16 14:24 GMT

ஒரகடம் மேம்பாலத்தின் கீழ், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் மேம்பாலத்தின் கீழ், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலைகள் இணையும், ஒரகடம் பகுதியில் மேம்பாலம் உள்ளது.

பிரதான தொழிற்சாலை பகுதியாக உள்ள, ஓரகடம் சந்திப்பில், வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை, மேம்பாலம்கீழ் ஸ்ரீபெரும்புதூர்- - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை செல்கிறது. இப் பகுதியைச் சுற்றி, 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பல லட்சம் ஊழியர்கள் பணி செய்கிறார்கள். இதனால், நாளொன்றிற்கு லட்சக்கணக்கான வாகனங்கள் இங்கு வந்து செல்கின்றன. இந்த நிலையில், ஒரகடம் மேம்பாலத்தின்கீழ், கார், மினி வேன் உள்ளிட்ட வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன.

Advertisement

இதனால், சாலையின் அகலம் குறைந்து, மற்ற வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. குறிப்பாக, கனரக வாகனங்கள், பேருந்து போன்றவை, மேம்பாலத்தின் கீழ் திரும்பும்போது, அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின்மீது உரசி விபத்து ஏற்படும் போது, வாகன ஓட்டிகளுக்கிடையே வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்படுகிறது. மேலும், பீக் ஹவர் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, ஒரகடம் போலீசார் மேம்பாலத்தின் கீழ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News