நாடாளுமன்றத் தேர்தல் 2024 - “நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு”

சேலம் மாவட்டத்திற்கு பிப்ரவரி 9-ஆம் தேதி வருகை- கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், எம்.பி., அவர்கள் அறிவிப்பு

Update: 2024-02-05 08:57 GMT

நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் சமத்துவப் பொங்கல் கொண்டாட வேண்டும் - கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் 2024 -“நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு” சேலம் மாவட்டத்திற்கு பிப்ரவரி 9-ஆம் தேதி வருகை தர உள்ளது.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கிய அறிவுரையின்படி, 2024 - நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவானது திருமதி. கனிமொழி கருணாநிதி எம்.பி., அவர்கள் தலைமையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர், பொதுமக்கள், கழக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளைக் கேட்க உள்ளார்.

அதன்படி பிப்ரவரி 9-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு சேலம், ரேடிசன் ஹோட்டலிற்கு (Radisson Hotel) வருகை தர உள்ளனர். எனவே நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட தமிழ்நாடு முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கோழி பொருட்கள் ஏற்றுமதி சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், லாரி ஓட்டுனர் சங்கம், லாரி பாடி பில்டர் சங்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கம், விசைத்தறி நெசவாளர்கள் சங்கம், விவசாய முன்னேற்ற சமூக சங்க கூட்டமைப்பு, பழங்குடியினர் நல மக்கள் மற்றும் வளர்ச்சி சங்கம், சிறு, குறு விவசாயிகள் சங்கம், வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், தொழில் முனைவோர், தொழிற்சங்கள், மாணவர் சங்கங்கள், அரசு ஊழியர்களின் பிரிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களது நிறுவனம்/ தொழில் அமைப்புகள் / சங்கங்கள் தொடர்பான ஒன்றிய அரசின் சார்பில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கை மனுக்கள் மற்றும் ஆலோசனைகளை தேர்தல் அறிக்கை குழுவினரிடம் நேரிலிலோ, கடிதம் மூலமாகவோ அல்லது கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு, அண்ணா அறிவாலயம், எண்.367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018.

மின்னஞ்சல் முகவரி : dmkmanifesto2024@dmk.in

தொலைபேசி எண் : 08069556900

வாட்ஸ்அப் : 9043299441

ட்வீட் : #DMKManifesto2024

பேஸ்புக் பக்கம் : DMKManifesto2024

இவ்வாறு கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News