கலைஞர் ஸ்டாலின் வேடமடைந்து வாக்கு சேகரித்த கட்சி நிர்வாகிகள்

கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் கலைஞர் ஸ்டாலின் வேடமடைந்து கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்

Update: 2024-03-28 06:57 GMT
கலைஞர் ஸ்டாலின் வேடமடைந்து வாக்கு சேகரித்த கட்சி நிர்வாகிகள். திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி இன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஜோதிடமணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கரூர் அடுத்த வெங்கமேடு பகுதிக்கு திறந்தவெளி வேனில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக கட்சி நிர்வாகிகளான சென்னையைச் சேர்ந்த குட்டிக் கலைஞர் மறைந்த தலைவர் கருணாநிதி வேடமிட்டும்,சயத் தளபதி வேடமிட்டும் பொது மக்களிடையே வாக்கு சேகரித்தனர். அப்போது பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அவர்களுடன் நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Tags:    

Similar News