தேர்தல் நடத்தை விதிமுறையை முன்னிட்டு கட்சி போஸ்டர்கள் அகற்றம்

காங்கேயம் மற்றும் வெள்ளக்கோவிலில் தேர்தல் நடத்தை விதிமுறையை முன்னிட்டு கட்சி போஸ்டர்கள், கொடிக்கம்பங்கள் பிளக்ஸ் பேனர்கள் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது.

Update: 2024-03-19 10:34 GMT

போஸ்டர் அகற்றம் 

தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்த உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் இந்த விதிகளை வகுத்துள்ளது. அந்த வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் இந்த விதிகளை பின்பற்றுவது அவசியமாகும்.

அனுமதி பெறாமல் கட்சி கொடிகள், பேனர்கள், போஸ்டர்கள் என எந்தவொரு கட்சியை குறிக்கும் வகையில் எந்தவித நடவடிக்கையும் செய்யக்கூடாது, வீடு, கடை, அலுவலகம், பொது இடங்கள் என எங்கும் கட்சி சார்ந்தவற்றை  வைக்கக்கூடாது.

இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் அனைத்து மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சிக்னல் ரவுண்டானா, மார்க்கெட் பகுதி, பொதுச்சுவர்கள், பெட்ரோல் பங்க், டீக்கடை, உணவகம் போன்ற அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்த பேனர்களை வேலையாட்களை கொண்டு கட்சிகள் அகற்றி வருகின்றனர். இதேபோல் வெள்ளகோவிலில் பழைய பஸ் நிலையம், முத்தூர் சாலை, புதிய பஸ் நிலையம், காமராஜபுரம், சிவநாதபுரம், நடேசன் ஆகிய பொது இடங்கள், சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த அனைத்து கட்சிகளின் கொடி கம்பங்கள், பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே இருந்த சுவர் விளம்பரங்கள், சாலை நடுவில் உள்ள தடுப்புகளில்  ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன.

இரும்பு கொடிகம்பங்கள் தரையில் கான்கிரீட் துருப்பிடித்து போல்ட் போட்டு நிறுவப்பட்டிருந்தால் அவை வெல்டிங் மூலம் அகற்றப்பட்டன. வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரர் மற்றும் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News