ஞானபுரீஸ்வரர் கோயிலில் பார்வதி கல்யாணம் பொம்மலாட்டம்
ஞானபுரீஸ்வரர் கோயிலில் நடந்த "பார்வதி கல்யாணம்" பொம்மலாட்ட நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.
Update: 2024-05-26 06:59 GMT
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஆதீன திருமடத்தில், வருகிற 30-ஆம் தேதி வரை சமய பயிற்சி வகுப்பு, கருத்தரங்கம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் "பார்வதி கல்யாணம்" என்ற கருப்பொருளில் பொம்மலாட்டம் நடைபெற்றது. பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து 5 வயதிலேயே கானகம் சென்று தவத்தில் ஈடுபட்ட பார்வதி தேவி, தவத்தின் பலனாக சிவபெருமானை அடைந்த இந்த புராண வரலாற்றை, கலைமாமணி விருதாளர் சோமசுந்தரம், பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் வாயிலாக குழந்தைகளுக்கு தத்ரூபமாக வெளிக்காட்டினார். இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.