நிரந்தர நிழற்குடை இல்லாமல் திருமழிசை பயணிகள் அவதி
திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் நிரந்தர நிழற்குடை இல்லாமல் திருமழிசை பயணிகள் அவதி.;
Update: 2024-02-07 10:16 GMT
பயணிகள் அவதி
திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், அரசு, தனியார் பணிக்கு செல்வோர் மற்றும் பகுதிவாசிகள் பயன்படுத்தி சென்னை சென்று வருகின்றனர். இந்த பேருந்து நிறுத்தத்தில் பனை ஓலையால் அமைக்கப்பட்ட நிழற்குடையால் பயணியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நிழற்குடையில் பேருந்துக்காக காத்திருக்கும் வயது முதிர்ந்த பகுதிவாசிகள் உட்பட அனைவரும் இருக்கைகள் கூட இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மழை நேரங்களில் பயணியர் மற்றும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிரந்தர நிழற்குடை அமைக்க வேண்டுமென பயணியர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.