பள்ளப்பட்டியில் நினைவு தூணுக்கு மலர்கள் தூவி மரியாதை
பள்ளப்பட்டி சுதந்திர போராட்ட வீரர்கள் நினைவு தூணுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-26 15:52 GMT
நினைவு தூணுக்கு மரியாதை
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, பள்ளப்பட்டி சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு தூணுக்கு, பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனைவர் ஜான், குடியரசு தின விழாவை முன்னிட்டு, மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஊர் முக்கியசர்கள் கலந்து கொண்டு மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தங்களது இதய அஞ்சலியை செலுத்தினர்.