அடையாளம் தெரியாத வாகனம் மோதி நடந்து சென்றவர் உயிரிழப்பு
வேலாயுதம்பாளையம் அருகே அடையாளம் தெரியாத மோதி நடந்து சென்றவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
பைல் படம்
கரூர் மாவட்டம், மூலிமங்கலம் அருகே உள்ள நல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி வயது 54. இவர் மே 6ஆம் தேதி இரவு 9 மணி அளவில் சேலம் - கரூர் சாலையில் வேலாயுதம்பாளையம் ஜெம் ரெஸ்டாரன்ட் அருகே நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நடந்து சென்ற குப்புசாமி மீது மோதி விட்டு, நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.
மறுநாள் காலை 6 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவ்வழியாக சென்றபோது, காயங்களுடன் குப்புசாமி உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு, அவரது மனைவி லட்சுமி வயது 43 என்பவருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த லட்சுமி தனது கணவர் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், குப்புசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, குப்புசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.