பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்

தடையை மீறி பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

Update: 2024-06-23 08:15 GMT

அபராதம் 

ராணிப்பேட்டை மாவட்டம், முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில் நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் அரக்கோணம் சாலை, கணபதிபுரம் சாலை, நெமிலி சாலை ஆகியவற்றில் உள்ள கடைகள், ஓட்டல்கள், தள்ளுவண்டி உணவகம் உள்ளிட்டவைகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் முகமது சையூப்தீன் மற்றும் பணியாளர்கள் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தபடுகிறதா என்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதனை பயன்படுத்திய கடைகாரர்களுக்கு ரூ.1800 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News