அச்சுக் காகிதங்களைப் பயன்படுத்தினால் அபராதம்

உணவுப் பண்டங்களை பொட்டலமிடுவதற்கு அச்சுக் காகிதங்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-05-09 08:39 GMT

பைல் படம் 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேநீா்க் கடைகளில் அச்சுக் காகிதங்களை (செய்தி தாள்களை) பயன்படுத்தி வடை, பயறு வகைகள், பலகாரங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பொட்டலமிடப்பட்டு வழங்கப்படுகின்றன. சூடான எண்ணெய் பலகாரங்களை அச்சுக் காகிதங்களில் வைக்கும் போது, நச்சுத் தன்மை கொண்ட 'மை' உணவுப் பொருள்களில் படிந்து விடுகிறது.

இதுதொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை பலமுறை எச்சரிக்கை விடுத்தும், தேநீா்க் கடை உரிமையாளா்கள், பலகார விற்பனையாளா்கள் பின்பற்ற மறுக்கின்றனா். திண்டுக்கல் மாவட்டம், முழுவதும் கடந்த 5 மாதங்களில் அச்சுக் காகிதங்களைப் பயன்படுத்தி பலகாரம் விற்பனை செய்ததாக 74 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் குழு அமைத்து, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News