ஓய்வூதிய சங்கத்தினர் கண்ணில் கருப்பு துணி அணிந்து போராட்டம்
திருப்பூர் மாவட்டஆட்சியர்அலுவலகம் முன்பு ஓய்வூதியசங்கத்தினர் கண்ணில் கருப்புதுணி அணிந்து போராட்டம்.;
By : King 24x7 Website
Update: 2023-12-13 05:39 GMT
திருப்பூர் மாவட்டஆட்சியர்அலுவலகம் முன்பு ஓய்வூதியசங்கத்தினர் கண்ணில் கருப்புதுணி அணிந்து போராட்டம்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்ணில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசு தேர்தலின் போது அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர், சத்துணவு ,அங்கன்வாடி ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், 70 வயதை கடந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்ணில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.