மாடர்ன் நகரில் 20 நாட்களாக குடியிருப்பை சூழ்ந்துள்ள மழைநீரால் மக்கள் அவதி
Update: 2023-12-07 10:16 GMT
விருதுநகர் மாடர்ன் நகரில் அரசு அலுவலர்கள், போலீசார் அதிகளவில் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பை சுற்றி 20 நாட்களுக்கு மேலாக தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். வாரக்கணக்கில் ஆவதால் கருமை நிறமாக மாறி துார்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகளவில் உள்ளது. இது குறித்து கூரைக்குண்டு ஊராட்சி தலைவர் செல்வி கூறியதாவது: மழைநீர் தேங்கும் குடியிருப்பு பகுதிகளில் தற்காலிக வாறுகால்கள் அமைக்கப்பட்டு மழைநீர் வடிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மாடர்ன் நகரில் பள்ளம் அதிகமாக உள்ளதால் அதிக நீர் தேங்கி உள்ளது.குடியிருப்பை சுற்றி ஏற்கனவே மழைநீர் தேங்கிய பல பகுதிகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், மாடர்ன் நகரிலும் வெளியேற்றினோம். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் மீண்டும் மழைநீர் தேங்கி விட்டது. இருப்பினும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.