சங்கிரியில் புதிய சாலை அமைக்க மக்கள் கோரிக்கை

சங்கிரியில் புதிய சாலை அமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.;

Update: 2024-05-28 10:43 GMT

சேதமடைந்துள்ள சாலை

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில் கிழக்குகரை கால்வாய் பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்த மாற்று பாதையில் உள்ள தென்னை மரத்தை வெட்டி சாலையை விரிவுபடுத்தி அமைக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசிராமணி குள்ளம்பட்டி வழியாக செல்லும் மேட்டூர் கிழக்குகரை கால்வாய் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டுமான பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றது.

Advertisement

இந்நிலையில் எடப்பாடியிலிருந்து அரசிராமணி வழியாக குமாரபாளையம் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், கனராக வாகனங்கள், தனியார் கல்லூரி, பள்ளிகளின் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருவதற்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றது.

எனவே புதிய மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக அமைக்கப்ப்டடுள்ள தற்காலிக சாலையில் உள்ள தென்னை மரத்தை வெட்டி கூடுதலாக சாலையை அகலப்படுத்தி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News