பழுதடைந்த சாலையை சீரமைக்க மக்கள் விடுத்த கோரிக்கை

சேலம் மாவட்டம், அரசிராமணி பேரூராட்சியில் பழுதடைந்த தார் சாலையை சீரமைக்க மக்கள் விடுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2024-02-05 04:56 GMT

குண்டும் குழியுமான சாலை

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட 6 வது வார்டு பகுதியில் உள்ள பிரதான தார் சாலை வழியாக வடக்குகாடு மற்றும் மோட்டூர் ,தண்ணீர்தாசனுர், ஒக்கிலிப்பட்டி ,பூமனியூர் கொட்டாய்வூர், கல்வடங்கம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் தார் சாலை பழுதடைந்து குண்டும் குழியமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே பழுதடைந்த தார் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டுமென பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News