துறையூா், முசிறியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

துறையூா், முசிறியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

Update: 2023-12-31 17:20 GMT

துறையூா், முசிறியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்

செங்குந்தா் மேல்நிலைப் பள்ளியில் வாா்டுகளுக்கு நடைபெற்ர முகாமை துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தொடக்கி வைத்துப் பேசினாா். துறையூா் நகா்மன்றத் தலைவா் ம.செல்வராணி, துணைத் தலைவா் ந. முரளி முன்னிலை வகித்தனா். முகாமில் முதல்வரின் முகவரி துறைக்கு 251, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு 60, வருவாய் துறைக்கு 55, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைக்கு 20, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளா் துறைக்கு 15 என அரசின் மற்ற துறைகள் மூலமாகவும் 413 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் அரசின் அனைத்துத் துறை அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். முசிறியில் நடைபெற்ற முகாமுக்கு கோட்டாட்சியா் ராஜன் தலைமை வகித்தாா். முசிறி வட்டாட்சியா்கள் பாத்திமா சகாயராஜ், நகராட்சி ஆணையா் கிருஷ்ணவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தொடங்கி வைத்தாா். முகாமில் பங்கேற்ற முசிறியின் 7முதல் 12 வரையிலான வாா்டு பகுதி பொதுமக்களிடமிருந்து மக்களுடன் முதல்வா் திட்டத்தில் 172 மனுக்களும், முதல்வரின் முகவரி 119 மனுக்களும் மொத்தம் 291 கோரிக்கை மனுக்களை அலுவலா்கள் பெற்றனா். முகாமில், தலைவா் கலைச்செல்வி சிவக்குமாா், துணைத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News