காந்தபாளையம் கிராமத்தில் கோவிலுக்கு பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
காந்தபாளையம் கிராமத்தில் கோவிலுக்கு பட்டா கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், காந்தபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு கருவுடை நாயகி சமேத வெள்ளதாங்கிஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான சர்வே எண்-70-ல் உள்ள 2.80 ஏக்கருக்கு நிலத்திற்கு நீண்ட நாட்களாக பட்டா வழங்க வலியுறுத்தி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மனு அளித்தும் எவ்வித பலன் அளிக்காததால் இன்று சீனத்தில் கிராம பொதுமக்களின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுமார் 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த வெள்ளந்தாங்கிஸ்வரர் ஆலய நிலத்திற்கு 100 ஆண்டுகள் அனுபவ பாத்தியத்துக்குட்பட்டு வருகிறது.
இந்த நிலத்திற்கு வருவாய்த்துறை அலுவலர்களிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக வெள்ளந்தாங்கிஸ்வரர் பெயரில் பட்டா கேட்டு மனு அளித்துள்ளனர். இதுவரை பட்டா வழங்காததை கண்டித்தும் மேலும் வெள்ளந்தாங்கிஸ்வரர் நிலத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதையும் மற்றும் தனி வழி பாதை கேட்பதை கண்டித்தும் அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென அங்கு உள்ள கோவில் மீது ஏறி பல்வேறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.