சேறும், சகதியமாக மாறிய தார் சாலையால் மக்கள் அவதி?
கோபாலப்பட்டினத்தில் சேறும், சகதியமாக மாறிய தார் சாலையால் அவதிப்படுவதாக மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
Update: 2023-12-05 07:32 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் கோபாலப்பட்டினத்தில் அவுலியா நகர் பகுதியில் நுாற்றுக்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் இந்த பகுதியில் உள்ள அனைத்து குறுக்கு சாலைகளும் சிதிலமடைந்து சேறும், சகதியுமாக மாறிவிட்டன. இதனால் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். சாலையை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.