தார் சாலையில் சாக்கடை தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி

எடப்பாடி பஸ் நிலைய பகுதிகளில் மழைநீர் சாக்கடையில் கலந்து தார் சாலையில் தேங்கியதால் மக்கள் அவதியுறுகின்றனர்.

Update: 2024-05-19 14:36 GMT

எடப்பாடி பஸ் நிலைய பகுதிகளில் மழைநீர் சாக்கடையில் கலந்து தார் சாலையில் தேங்கியதால் மக்கள் அவதியுறுகின்றனர்.


இந்த வருடம் கோடைகால வெப்பம் எப்பவும் இல்லாத அளவிற்கு மக்களை வாட்டி வந்த நிலையில் தமிழகத்தில் ஒரு வார காலமாக வானிலை சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி நகர மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. இதனால் எடப்பாடி பஸ் நிலையம் சுற்றியுள்ள சாக்கடைகளில் மழைநீர் தேங்கி வெளியேற வழி இன்றி மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் சாக்கடை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் பொதுமக்கள் சாக்கடை நீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
Tags:    

Similar News