பத்திர பதிவு செய்வதற்காக வெயிலில் காத்திருக்கும் மக்கள்

காங்கேயம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் கடும் வெயிலில் நின்று பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.;

Update: 2024-05-10 09:06 GMT

காங்கேயம் பகுதியில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் தினசரி அளவில் 50 முதல் 100 பத்திரங்கள் வரை பதியப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே காலை 9 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை மக்கள் தங்களின் நிலம், வீடு, காடு ஆகியவற்றை விற்பனை செய்யவும், வாங்கவும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பத்திரம் பதிவது வழக்கம்.

இவ்வாறு காங்கேயம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களாகிய ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு அமர போதிய இருக்கை வசதி கூட இல்லாமல் செயல்படுகிறது எனவும், மேலும் பொதுமக்கள் பெரும்பாலும் இந்த கோடை கால வெய்யிலின் தாக்கத்தில் சார்பதிவாளர் அலுவலகத்திற்து வெளியேவும் எதிரே உள்ள வீடுகளின் வாசலிலும் வெகு நேரம் நின்று கொண்டும், அமர்ந்திருந்தும் தங்களின் பத்திரங்களை பதிந்து செல்வதாக குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement

எனவே இது சம்பந்தப்பட்ட துறை உடனடியாக காங்கயம் திருப்பூர் சாலையில் தற்காலிகமாக இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகத்தை சோதனை செய்து பத்திரப்பதிவிற்கு வரும் பொதுமக்கள் முழு வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் துறையான பத்திரப்பதிவுத்துறையிலேயே இதுபோல் பொதுமக்களை சிரமத்திற்கு ஆளாக்கும் நிகழ்வுகள் நடைபெறுவது வேதனை அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்

Tags:    

Similar News