ஏரியில் மண் அள்ளி கடத்திய நபர்கள் கைது
அரூர் அருகே ஏரியில் அனுமதி இன்றி மண் கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Update: 2024-06-16 11:01 GMT
தர்மபுரி மாவட்டம் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முளவன்குட்டை ஏரியில், கீரைப்பட்டி விஏஓ சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, ஏரியில் மண் அள்ளி கடத்த முயன்ற டிப்பர் லாரியை 3 யூனிட் மண்ணுடன் பறிமுதல் செய்து, அரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரான கோணம்பட்டியை சேர்ந்த அஜித் என்பவரை கைது செய்தனர். இதேபோல் அரூர் அடுத்த ஈட்டியாம்பட்டி பகுதியில், எல்லப்புடையாம்பட்டியில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில், மண் கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், டிராக்டர் டிரைவர் கெளாப்பாறையைச் சேர்ந்த வேடியப்பன் மகன் அர்ஜூனன் என்பவரை, அரூர் காவல்துறையினர் கைது செய்தனர்.