ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம்
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-02-19 11:41 GMT
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாவட்ட முழுவதிலும் இருந்து 427 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் எட்டு பயனாளிகளுக்கு ரூ. 56,590 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த கட்டத்தில் துணை ஆட்சியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்..